இரும்பு வியாபாரி தற்கொலை

வேடசந்தூர் அருகே இரும்பு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-01 18:08 GMT

வேடசந்தூர் அருகே உள்ள மொங்குபித்தம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 38). பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி, கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவி பிரிந்து வாழ்கிறார். இதனால் தனது பெற்றோருடன் தற்போது, வேடசந்தூரில் வடமதுரை சாலையில் உள்ள பாலாஜிநகரில் பாலசுப்பிரமணி வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பாலசுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-----

Tags:    

மேலும் செய்திகள்