பெண் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

கூத்தாநல்லூர் அருகே பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-05 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, பாண்டுகுடி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் மனைவி முத்துலட்சுமி (வயது 57).இவரின் உறவினர் சந்திரசேகர் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்(31) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி (41) ஆகிய இரண்டு பேரும் குடிபோதையில் முத்துலட்சுமி வீட்டருகே நின்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இரும்பு கம்பியால் தாக்குதல்

இதனை முத்துலட்சுமி தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார் மற்றும் பக்கிரிசாமி இருவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் அவரை தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த முத்துலட்சுமி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

2 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார் மற்றும் பக்கிரிசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்