அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்

அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-25 14:24 GMT

வேதாரண்யம்:

அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க வட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு சங்க வட்டார தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவா் ராசமாணிக்கம், மாவட்ட இணைச் செயலாளா்கள் வேதரத்தினம், வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார இணைச் செயலாளர் காந்தி வரவேற்றார். துணைத் தலைவா் சங்கரபாணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். இறந்த சங்க உறுப்பினர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் நடராஜன் பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அகவிலைப்படி

கிராம உதவியாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை நேர அரசு பணியாளா்களாக்கி ஓய்வூதியம் ரூ.7,800 வழங்க வேண்டும். மேலும் அவர்களை புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

1.1.2022 -ந்தேதி முதல் வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்ற ஓய்வூதியதாரா்களுக்கு காப்பீடு தொகை உடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

---


Tags:    

மேலும் செய்திகள்