இரட்டைக்கொலை வழக்கில் 300 பேரிடம் விசாரணை

இரட்டைக்கொலை வழக்கில் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Update: 2023-08-03 20:08 GMT

உப்பிலியபுரம்:

இரட்டைக்கொலை

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூர் ஆசாரித்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவரது மனைவி சோபனபுரத்தை சேர்ந்த சாரதா (20). இந்த தம்பதியினர் சம்பவத்தன்று குத்தகை பார்த்த வயலில் உறங்கி கொண்டிருந்த போது கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில், தொட்டியம், உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் முசிறி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு யாஷ்மின் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குற்றப்பிரிவு போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

300 பேரிடம் விசாரணை

இரட்டைக் கொலை சம்பந்தமாக கொலையான தம்பதியின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், பக்கத்து தோட்டக்காரர்கள், தொழில் போட்டியாளர்கள் மற்றும் பி.மேட்டூர், சோபனபுரத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் பேரில் 200-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன் உரையாடல்கள், குறுஞ்செய்திகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கொலை நடந்த அன்று உப்பிலியபுரம், சோபனபுரம், கொப்பம்பட்டி பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வுகள் செய்தும், பிரேத பரிசோதனை அறிக்கைகள், சைபர் கிரைம் போலீசார் விசாரணைைய முடுக்கி விட்டுள்ளனர். மேலும் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என முசிறி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு யாஷ்மின், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்