மாணவிகள் பாலியல் புகார் எதிரொலி: அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மேலும் 3 ஊழியர்களிடம் விசாரணை

கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் 3 ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2023-10-25 18:45 GMT

நாகர்கோவில், 

கோட்டார் ஆயுர்வேத கல்லூரி

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏராளமான டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 35 வயதான பெண் டாக்டர் ஒருவருக்கு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) ஆன்டனி சுரேஷ்சிங் (வயது 52) என்பவா் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

பின்னர் கோட்டார் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது, 2 மருத்துவ மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை நடந்த அதிர்ச்சி சம்பவம் வெளியானது.

மேலும் இதுபற்றி மாணவிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும் 3 ஊழியர்களிடம் விசாரணை

அதில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் லேப்-டெக்னீசியனாக பணியாற்றி வரும் சுசீந்திரம் காக்குமூர் பகுதியை சேர்ந்த வைரவன் (35), தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தனர்.

உடனே போலீசார் வைரவனை அதிரடியாக கைது செய்தனர். பெண் டாக்டர் மற்றும் 2 மருத்துவ மாணவிகளுக்கு ஆயுர்வேத கல்லூரியில் பாலியல் தொல்லை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 3 ஊழியர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பூதாகரமாகி வருவதால் மேலும் சிலர் சிக்குவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்