தூக்கில் ஆண் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை

Update: 2022-09-27 18:45 GMT

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே பைரமங்கலம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பைரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ரத்தினவேல், கெலமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பிணத்தை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூக்கில் பிணமாக தொங்கிய நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்