திற்பரப்புக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கோடை வெயிலுக்கு இடையே திற்பரப்புக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு அருவியில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.;

Update: 2023-04-23 18:45 GMT

திருவட்டார், 

கோடை வெயிலுக்கு இடையே திற்பரப்புக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு அருவியில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.

திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று. கோடை வெயிலுக்கு இடையே திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது.

அங்கு அருவியில் விழுந்த மிதமான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடி பொழுதை கழித்தனர். மேலும் அருவியின் மேல் பகுதியில் உள்ள திற்பரப்பு தடுப்பு அணையிலும் கூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். அப்போது கோதையாற்றின் இருகரையிலும் உள்ள இயற்கை எழில் மிகு காட்சிகளை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக வெயில் காலங்களுக்கு ஏற்ற நுங்கு மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யும் தற்காலிக கடைகளும் ஏராளமாக முளைத்திருந்தன. இதனால் அங்கு வியாபாரம் 'களை' கட்டியது. திற்பரப்புக்கு ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மாத்தூர் தொட்டி பாலம்

இதேபோல் மாத்தூர் தொட்டி பாலத்திலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் பாலத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நடந்து சென்று மறு பக்கம் வழியாக இறங்கி பிரமாண்டமான பாலத்தின் தூண்களை ரசித்து திரும்பினர்.

சிலர் பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்