பயோ மெட்ரிக்முறை அறிமுகம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக்முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக்முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் முறை
தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்றுமுன்தினம் முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல்கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பயன்பெறுவார்கள். நெல்லை கொடுக்கும் விவசாயிகளிடம் மூடைக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
முறைகேடுகள்
கொள்முதல் முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு உணவுப்பொருள் மற்றும் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி விஜய் முருகன் கூறுகையில், பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் முறைகேடுகளை தவிர்க்க கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை தேவை. விவசாயிகளிடம் கூடுதல் பணம் வசூலிப்பதை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.