வீட்டை எழுதிக்கேட்டு டிக்கெட் பரிசோதகருக்கு மிரட்டல்

வீட்டை எழுதிக்கேட்டு டிக்கெட் பரிசோதகருக்கு மிரட்டிய மனைவி, மகள்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-16 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அரசு ஊழியர் நகரில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது 63). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துத்துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி வச்சலா, மகள்கள் நவநீதம், வின்னொலி ஆகியோருடன் ஒரே வீட்டில் 8 வருடமாக தனியாக சமைத்து சாப்பிட்டு வசித்து வருகிறார். சம்பவத்தன்று வச்சலாவும், அவரது மகள்கள் 2 பேரும் நாகராஜின் பெயரில் உள்ள வீட்டை தங்கள் பெயரில் எழுதி தரும்படி கேட்டு அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நாகராஜ், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வச்சலா உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்