கருப்பூர் அருகே கந்து வட்டி கேட்டு தொழிலாளிக்கு மிரட்டல் பைனான்சியர் கைது

கருப்பூர் அருகே கந்து வட்டி கேட்டு தொழிலாளியை மிரட்டிய பைனான்சியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-24 20:54 GMT

கருப்பூர்:

சேலம் கருப்பூர் அருகே உள்ள தேக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள கொல்லப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா (வயது 42). இவருடைய கணவர் சக்திவேல், கொத்தனாராக உள்ளார். வீடு கட்டுவதற்காக சக்திவேல், தேக்கம்பட்டி வட்டக்காடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பைனான்சியர் சுந்தரராஜன் (50) என்பவரிடம் தனது நில பத்திரத்தை அடமானம் வைத்து 2017-ம் ஆண்டு ரூ.4 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் சுந்தரராஜன் கந்து வட்டி கேட்டு நில பத்திரத்தை தர மறுத்ததுடன், சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுந்தர்ராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர். மேலும் இதுபோன்று கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்