சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது சேலத்தில் மன்னார்குடி ஜீயர் பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என்று சேலத்தில் மன்னார்குடி ஜீயர் கூறினார்.;

Update:2022-06-22 03:42 IST

சேலம்

சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலுக்கு மன்னார்குடி செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அக்னிபத் திட்டம் குறித்த விவரம் தெரியாதவர்களே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ராணுவ அதிகாரிகளோ, முன்னாள் ராணுவ வீரர்களோ இதுவரை அதற்கு எதிரான கருத்துக்களை சொல்லவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடுவது இந்து விரோத  செயலாகும். அறநிலையத்துறை இதில் தலையிடக்கூடாது. இந்து கோவில்களின் நிர்வாகத்தில் தலையிடுபவர்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் தலையிட முடியுமா?. திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பா.ஜ.க.வே இந்து மத தர்மத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டாலும் எதிர்ப்போம்.

இவ்வாறு மன்னார்குடி ஜீயர் கூறினார்.

முன்னதாக கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஜீயர் ஆசி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்