கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல்
சாத்தான்குளத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு நேற்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் நேர்காணல் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.