தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேர்காணல்

தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேர்காணல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-08-11 12:18 GMT

தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு வருகிற 30-ந்தேதி நேர்காணல் நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆவின் பொதுமேலாளர் என்.அமரவாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மருத்துவ ஆலோசகர் பணி

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 177 சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 33 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டகளை செய்து வருகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள 4 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

நேர்காணல்

இந்த திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக கால்நடை மருத்துவ ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கு வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது. எனவே பணிபுரிய விருப்பம் உள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டபடிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்