விலையில்லா ஸ்மார்ட் போன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

திருவண்ணாமலையில் விலையில்லா ஸ்மார்ட் போன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் நடந்தது.

Update: 2023-10-13 16:27 GMT

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் பாா்வை குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாா்வை குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் பலர் விலையில்லா ஸ்மார்ட் போன் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த நிலையில் விலையில்லா ஸ்மார்ட் போன் கேட்டு விண்ணப்பித்த 248 பேருக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.

அப்போது விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு மருத்துவ அலுவலர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நேர்காணல் மூலம் தகுதி உடையவர்களுக்கு விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்