சர்வதேச யோகா தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்து வருகின்றனர்.

Update: 2024-06-21 02:21 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச யோகா தினம் உலகளவில் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்மொழிந்தபோது, யோகா மீது உலகின் பார்வை பதிந்தது. இந்த முன்மொழிவைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐநா அறிவித்து, 2015ம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நாளில் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறார்கள். இந்த நாளில், மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகா பயிற்சி செய்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி யோகாசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி யோகாசனம் செய்தார். முன்னதாக, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்