சர்வதேச தினை, சிறுதானியங்கள் விழிப்புணர்வு கண்காட்சி
ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச தினை, சிறுதானியங்கள் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச தினை மற்றும் சிறுதானியங்கள் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ரவீந்திரநாதன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் பல்வேறு சிறுதானியங்களால் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டு சத்துணவுகள் காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் நடேசன், துணைத்தலைவர் தேவராஜ், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.