சர்வதேச உணவு தின விழா

செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச உணவு தின விழா நடந்தது.

Update: 2023-10-15 18:45 GMT

செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இண்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு தமிழ் பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் விதமாக உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ மாணவிகள், உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய உணவு வகைகளான கேழ்வரகு தோசை, கேப்பை கூழ், கம்பங்கூழ், புட்டு, எள்ளு மிட்டாய், பால் கொழுக்கட்டை, பால் பாயாசம், சிறுதானிய கூழ், காய்கறி உணவுகள், நவதானியகேசரி, கருப்பட்டி லட்டு, ரவா லட்டு போன்றவற்றை காட்சிப்படுத்தினர். மேலும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை மற்றும் அதை உண்பதால் நாம் அடையும் நன்மைகளை பள்ளி மாணவர்களிடையே வலியுறுத்த இவ்விழா கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் நூஜ்மா பேகம் மற்றும் இந்துஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்