இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-07-01 13:30 GMT

கூடலூர்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

கலந்தாய்வு கூட்டம்

தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் அருண்குமார் அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:-

தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு என தனித்தனியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நடுநிலைப்பள்ளியில் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைபபள்ளிகளுக்கு பணியிட மாறுதலில் சென்று உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

பதவி உயர்வு

நடுநிலைப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் பணி மாறுதல் நடைபெறும்போது தொடக்க கல்வித்துறையில் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது நடைமுறை.

எனவே அவ்வாறு நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் அந்தந்த ஒன்றியங்களில் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பனி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிய பிறகே மாவட்ட மாறுதல்களை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்