தாயில்பட்டியில் வாகன சோதனை தீவிரம்

வெளியூர்களுக்கு பட்டாசு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தாயில்பட்டியில் வாகன சோதனையும் தீவிரமாக நடக்கிறது.

Update: 2022-10-03 19:06 GMT

தாயில்பட்டி, 

வெளியூர்களுக்கு பட்டாசு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தாயில்பட்டியில் வாகன சோதனையும் தீவிரமாக நடக்கிறது.

பட்டாசு தயாரிக்கும் பணி

தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இங்கு பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பட்டாசு ஆலையில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வாகனங்களின் மூலம் பிற மாவட்டங்களுக்கும், பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

வாகன சோதனை

அனுமதி பெறாமலும், உரிய ரசீது இல்லாமலும் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் உத்தரவின் பேரில் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம் பண்ணை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வழியாக செல்லும் வாகனங்களில் பட்டாசுகள் உரிய அனுமதியுடன், பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகிறதா என வாகன சோதனையின் போது போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்