வேலூர் மாநகரில் சுவரொட்டிகள் அகற்றும் பணி தீவிரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் மாநகரில் சுவரொட்டிகள் அகற்றும் பணி தீவிரம்
வேலூர்
வேலூரில் புதிய பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
வேலூர் மாநகர பகுதியில் சாலைகளை சீரமைக்கவும், சுத்தமாக வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி ஊழியர்கள் வேலூர் அண்ணாசாலையில் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் இருந்த புல் புதர்களை அகற்றி விட்டு அதில் அலங்கார செடிகள் நடவு செய்துள்ளனர்.
இதேபோல மாநகராட்சி பகுதியில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய பேனர்கள், சுவரொட்டிகளை அகற்றி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை சத்துவாச்சாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலசுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
இதேபோல மாநகராட்சி சாலையோரங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
முதல்அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகர பகுதியை சுத்தம் செய்யும் பணி மற்றும் அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
2 கட்டமாக இந்த பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
--
---
Image1 File Name : 11067591.jpg
----
Reporter : T. ALWIN_Staff Reporter Location : Vellore - VELLORE