வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி பணி தீவிரம்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி பணி தீவிரமாக நடைபெற்றது.

Update: 2022-11-10 18:45 GMT

வேதாரண்யம்:

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி பணி தீவிரமாக நடைபெற்றது.

உப்பு உற்பத்தி

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உப்பு பாத்திகளில் தண்ணீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.

3 நாட்களுக்கு கனமழை

உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பளதொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சேமிக்கப்பட்டுள்ள உப்பை தார்பாய் மற்றும் பண ஓலை மூலம் உற்பத்தியாளர்கள் பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.

ஏற்றுமதி பணி தீவிரம்

வேதாரண்யம் பகுதியில் நேற்று காலை மழை பெய்யாததால் உப்பு ஏற்றுமதி பணி தீவிரமாக நடைபெற்றது.

உப்பு பாக்கெட்டுகளை லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்