அரசு பள்ளிகளில் தூய்மை பணி தீவிரம்

பள்ளிகள் வருகிற 7-ந் தேதி திறக்கப்பட உள்ளதால் அரசு பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-06-04 18:45 GMT

திட்டச்சேரி:

பள்ளிகள் வருகிற 7-ந் தேதி திறக்கப்பட உள்ளதால் அரசு பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

7-ந்தேதி பள்ளி திறப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதை தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது.

இதன் காரணமாக பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தூய்மை பணி

பள்ளிகள் திறப்புக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வர்ணம் பூசுதல், வகுப்பறைகள் தூய்மைப்படுத்தல், பள்ளி வளாகத்தில் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டன.

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் தூய்மை பணிகள் நடந்தது.

செடி, கொடிகள் அகற்றம்

பள்ளி வளாகத்தில் உள்ள கருவேலமரம், செடி, கொடிகள், புதர்கள் அகற்றப்பட்டன.மேலும் கழிப்பறைகள், பள்ளி வளாகங்கள், குடிநீர் தொட்டிகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்