ரூ.1¾ கோடியில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகம்

குடியாத்தத்தில் ரூ.1¾ கோடியில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2023-07-21 17:56 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் வாடகை கட்டிடத்தில் இரண்டு இடங்களில் வணிகவரி அலுவலகங்கள் இயங்கி வந்தது. தற்போது குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.1 கோடியே 80 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகம் கட்டப்பட்டது.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து குடியாத்தம் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில வரிகள் துணை ஆணையர் முகமதுஅயூப் தலைமை தாங்கினார். துணை மாநில வரி அலுவலர்கள் ஜெகநாதன், ஹரிகரன், குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வரி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், குடியாத்தம் அமலுவிஜயன் எம்்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவர்கள் எல்.ரவிச்சந்திரன், என்.இ.சத்யானந்தம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.சீதாராமன், ஊராட்சிமன்ற தலைவர் கோட்டீஸ்வரிபாபு, உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில வரி அலுவலர் மதுசூதனன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்