ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-07 18:17 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 56 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள ஈசாந்தை, உலகங்காத்தான், வி.பி.அகரம், வி.அலம்பலம், அம்மையாகரம், அனுமனந்தல், எலவடி, ஈரியூர், கூகையூர், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஆலத்தூர், கா.அலம்பலம், மாதவச்சேரி, மேலூர், நிறைமதி, கல்வராயன்மலை ஒன்றியம் வெள்ளிமலை, ஆரம்பூண்டி, வெங்கோடு மற்றும் ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரம், முருகம்பாடி, பழையசிறுவங்கூர், ஜம்பை, பெரியகொள்ளியூர், ஈருடையாம்பட்டு, லா.கூடலூர், மரூர், சங்கராபுரம் ஒன்றியம் எல்.என்.பட்டி, மேலப்பட்டு, மூக்கனூர், ஆரூர், கீழப்பட்டு, கிடங்குடையாம்பட்டு, மேல்சிறுவள்ளுர், தியாகதுருகம் ஒன்றியம் பீளமேடு, எஸ்.ஒகையூர், தியாகை, வடதொரசலூர், சின்னமாம்பட்டு, திருக்கோவிலூர் ஒன்றியம் வடமருதூர், வேங்கூர், டி.கீரனூர், கொடியூர், திம்மாச்சூர், அரியூர், வஅதண்டமருதூர், அவியூர், டி.முடியனூர், திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்களம், வேலூர், உதயநத்தல், ஆதனூர், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை ஒன்றியம் பிடாகம், அ.குமாரமங்களம், அ.சாத்னூர், வீரமங்களம், ஆலங்கிரி ஆகிய கிராமங்களில் இன்று (புதன்கிழமை)சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் மற்றும் கிராம தொழில்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். எனவே விவசாயிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்