போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை சூப்பிரண்டாக பதவி உயர்வு

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை சூப்பிரண்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டது;

Update:2023-06-16 02:28 IST

தமிழகத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்களின் சர்வீஸ் மற்றும் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 46 இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் உதவி போலீஸ் கமிஷனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

அதில் மதுரை சுப்பிரமணியபுரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கணேசன், திண்டுக்கல் எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், மதுரை எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் அதே பிரிவில் போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.யூ) இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி அதே பிரிவில் போலீஸ் துணை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் மதுரை செல்லூர் உதவி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்