மூலைக்கரைப்பட்டியில் அதிகாரி ஆய்வு

மூலைக்கரைப்பட்டியில் அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2023-04-23 19:30 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் (சென்னை) மலையமான் திருமுடிக்காரி வருகை தந்து நேரில் ஆய்வு செய்தார். தூய்மை பணி, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு, குப்பைகளை தரம் பிரிப்பது, மக்கும் குப்பைகளில் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நெல்லை மண்டல செயற்பொறியாளர் தர்மராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சாஜன்மேத்யூ, லோபமுத்திரை, பணி மேற்பார்வையாளர் விஜயபாரதி, பேருராட்சி மன்ற தலைவர் கு.பார்வதிமோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்