உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
பாளையங்கோட்டையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்தனர்.
பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் தலைமையில், இளநிலை பகுப்பாளர் கணேஷ்ராம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் கீழ்பக்க உள்ள சாலையோர கடைகள் ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் விற்பனை செய்யப்படும் சிக்கன் ஷவர்மா, மயோனேஸ், காலி பிளவர் 65, சிக்கன் 65, போளி, குளிர்பானங்கள், பால், ஐஸ்கிரீம் ஆகியவற்றில் உணவு மாதிரி எடுத்து, பொதுமக்கள் முன்னிலையில் நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூடத்தில் பகுப்பாய்வு செய்தனர்.
இந்த வாகனம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு வரும்போது, அந்தந்த பகுதி மக்கள் தாங்கள் சந்தேகப்படும் உணவின் மாதிரிகளை இந்த வாகனத்தில் இலவசமாக பகுப்பாய்வு செய்து கொள்ளலாம் கூறப்பட்டுள்ளது.