ஆரணி போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவர், புகார் மனுக்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.