சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
ஓசூரில் சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.
மத்திகிரி
ஓசூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் மூலமாக ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் குடிசாதனப்பள்ளி வரை இருவழிச்சலையில் இருந்து 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணியை கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை தரமாகவும், பணிகளை விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாகலூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் இணைப்பு கம்பிகள் சீரமைக்கும் பணியை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஓசூர் உதவி கோட்டப்பொறியாளர் செந்தில்குமரன், உதவிப்பொறியாளர் வெங்கட்ராமன் மற்றும் பலர் உள்ளனர்.