பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் ஆய்வு

பசும்பொன்னில் நடந்துவரும் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2022-10-28 18:07 GMT

கமுதி, 

பசும்பொன்னில் நடந்துவரும் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார்.

டி.ஜி.பி. ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று பசும்பொன் வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன் கிராமத்தில் மட்டும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்தபடி...

14 டிரோன்கள் பசும்பொன் கிராமம் முழுவதும் பறக்க விடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னையில் இருந்தபடியும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகர்க், டி.ஐ.ஜி. மயில்வாகனன், ராமநாதபுரம் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்