ராசிபுரம் கோட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகளை அதிகாரி ஆய்வு

ராசிபுரம் கோட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகளை அதிகாரி ஆய்வு

Update: 2022-06-29 18:04 GMT

ராசிபுரம்:

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட ராசிபுரம் கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் அலவாய்ப்பட்டி சாலை, கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், பாச்சல் சாலையில் ஓடுதளத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் மாநில நெடுஞ்சாலையான மல்லியக்கரை, ராசிபுரம், திருச்செங்கோடு, ஈரோடு சாலையில் (காக்காவேரி மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில்) சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை நெடுஞ்சாலைத்துறை தர கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் பார்வையிட்டு அமைக்கப்பட்ட சாலையின் தார்தளத்தின் கனம், மற்றும் சாலையின் கேம்பர் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நாமக்கல் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி, தர கட்டுப்பாடு உதவி பொறியாளர் பிரபாகரன், ராசிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்