அரூர் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி. திடீர் ஆய்வு

Update: 2023-08-01 19:30 GMT

அரூர்:

சென்னை தலைமை இடத்து போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் அரூர் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டார். இந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள், குற்ற சம்பவங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அரூர் கோட்டத்தில் சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொது மக்களை கனிவுடன் அணுகி அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி விரைவாக தீர்வு காண வேண்டும் என்று இந்த ஆய்வின் போது போலீஸ் ஐ.ஜி. போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்