தர்மபுரி நகரில் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை கடைகளில் தர்மபுரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது தின்பண்டங்கள், குளிர்பானங்கள், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவைகளில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் முகவரி, உணவு பாதுகாப்பு லைசன்ஸ் ஆகியவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
மேலும் உணவு தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் தலையுறை, கையுறை அணிந்து உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பேக்கரிகள், ஓட்டல்கள், உணவகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கடைக்காரர்களுக்குஅறிவுறுத்தப்பட்டது.