மருத்துவர் சமூகத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தல்

மருத்துவர் சமூகத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-03-12 19:07 GMT

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிறப்பு கூட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருந்து மாற்றி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வேண்டும். மருத்துவர் சமூக மக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும், நாதஸ்வர, தவில் இசை கலைஞர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி அதன் பிரதியை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரையிடம் வழங்கி வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் கார்த்திக் உள்ளிட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்