விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-19 18:45 GMT

தேவகோட்டை, 

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் சார்பில் தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 30 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமும், அந்த விவசாயிகளுக்கு மானியமாக ஒரு எக்ேடருக்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்க தேர்வு செய்யப்பட்டு அதற்குரிய இடுபொருள் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மாவட்ட திட்ட ஆலோசகர் கண்ணன் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். அப்போது தேவகோட்டை வேளாண்மை துறை உதவி இயக்குனர் காளிமுத்து, வேளாண்மை அலுவலர் கமலாதேவி, உதவி அலுவலர் தியாகு மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்