கோவை மத்திய சிறையில் கைதி திடீர் சாவு

கோவை மத்திய சிறையில் கைதி திடீர் சாவு

Update: 2023-02-21 18:45 GMT

கோவை

திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 34). இவர் திருப்பூரில் கஞ்சா விற்றதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறையில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்