வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட கட்டிடத்தொழிலாளி

மடத்துக்குளம் அருகே உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட கட்டிடத்தொழிலாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை முயற்சியா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-12-04 18:25 GMT

மடத்துக்குளம் அருகே உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட கட்டிடத்தொழிலாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை முயற்சியா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உடலில் வெட்டுக்காயம்

மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளம் பகுதியில் புதர்களுக்கு நடுவே பலத்த வெட்டுக்காயங்களுடன் நிர்வாண நிலையில் ஆண் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

அவர் தன்னிலை மறந்த அளவுக்கு போதையில் இருந்தார். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த மடத்துக்குளம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து, ரத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை

இதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச்சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் திருமலைசாமி (வயது 36) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் சிலருடன் இணைந்து கட்டிட வேலை செய்வதற்காக மடத்துக்குளம் பகுதிக்கு வந்துள்ளார். ஆனால் அவர் எப்படி அந்த பகுதிக்கு வந்தார். உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது எப்படி என்ற கேள்விக்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வந்ததாகத் தெரிகிறது.

நண்பர்களுடன் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டாரா? அல்லது போதையின் உச்சத்தில் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது ெகாலை முயற்சி நடந்ததா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடையில்லாத நிலையில் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கட்டிடத்தொழிலாளி மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்