பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் தற்போது கால்நடைகளை அம்மை நோய் தாக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாடு, கன்றுகள் அடுத்தடுத்து இறந்து வருகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். மாரண்டஅள்ளியை சேர்ந்த விவசாயி ஒருவரின் கன்றுக்குட்டி அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கன்றுக்குட்டி பரிதாபமாக காட்சி அளிக்கிறது. மேலும் பல்வேறு மாடுகளும் தொடர்ச்சியாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.