அரசு பெண்கள் பள்ளியில் பச்சிளம் குழந்தை பிணம்
புவனகிரி அரசு பெண்கள் பள்ளியில் பச்சிளம் குழந்தை பிணம் கிடந்தது.
புவனகிரி:
புவனகிரியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை கழிவறை அருகில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை இறந்து கிடந்தது. இதை பார்த்து மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த குழந்தையை வெளிப்புறத்தில் இருந்து யாராவது தூக்கி வீசினார்களா?, பள்ளிக்குள்ளேயே யாருக்கேனும் குழந்தை பிறந்து இறந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.