தலா ரூ.34½ கோடி மதிப்பீட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள்

ராணிப்பேட்டை, அரக்கோணத்தில்தலா ரூ.34½ கோடி மதிப்பீட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2023-06-08 17:49 GMT

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு முழுவதும் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள, தொழில் 4.0 தொழில் நுட்ப மையங்களை, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரக்கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் தலா ரூ.34½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையங்களை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காணொலி காட்சி வாயிலாக நடந்த நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொழில்நுட்ப மையத்தில் குத்து விளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்.

அப்போது இந்த மையம் சிறப்பாக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது, மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் எந்திரங்களையும், மையத்தினையும், சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி, ஹூண்டாய் மேலாண்மைக்குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் சுஜாதா வினோத். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொக்கலிங்கம், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பாபு, மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்