நெல்லை சந்திப்பு சாரதா எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பில் இந்திர விழா நடந்தது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் இருந்து ஐப்பசி அமாவாசை அன்று மண் எடுத்து வந்து பசு, கன்று செய்து அதற்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடத்தி பெண்கள் வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, இந்திர விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு கோலாட்டம் அடித்தனர். பின்னர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக தாமிரபரணி ஆற்றில் பசுவையும், கன்றையும் கரைத்தனர்.