இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.;
அருப்புக்கோட்டை,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் விருதுநகர் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் அருப்புக்கோட்டையில் நடைெபற்றது. மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம்சா தலைமை வகித்தார். நகர தலைவர் முகமது அபூபக்கர், செயலாளர் செய்யது ராஜா முகமது முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் முகமது சம்சுதீன் வரவேற்றார். பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர், துணைத் தலைவர் நவாஸ் கனி, தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் சர்தார் நன்றி கூறினார்.