இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-27 18:45 GMT

மணல்மேடு:

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலைக் கல்லூரி வாயிலில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய துணைத் தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் அரவிந்த்சாமி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக சென்றபோது போலீசார் கைது செய்ததை கண்டித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்