இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் தர்ணா

Update: 2023-05-28 19:50 GMT

தம்மம்பட்டி:-

தம்மம்பட்டி பஸ் நிலையம் முன்பு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், ராஜகோபால், முருகன், சின்னையன், அருணா, செந்தில்குமார், செந்தில் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது 30 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பேரூராட்சியில் மக்கள் நலப்பணிகள் பாரபட்சம் இன்றி செயல்படுத்த வேண்டும். பால் உற்பத்தியாளருக்கு பால் விலை லிட்டருக்கு ரூ.50 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களைஎழுப்பினர்.

மேலும் செய்திகள்