இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம் செம்பனார்கோவிலில் நடந்தது

Update: 2023-07-24 18:45 GMT

பொறையாறு:

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், செம்பனார்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளன ஒன்றிய தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். சம்மேளனத்தை சேர்ந்த அபிராமி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், இந்திய மாதர் தேசிய சம்மேளன பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுகன்யா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்