இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஊர்வலம்-பொதுக்கூட்டம்

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஊர்வலம்-பொதுக்கூட்டம் நடத்தினர்.

Update: 2023-10-04 19:15 GMT

திருச்சி புத்தூர் நால் ரோட்டில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்க உறுப்பினர் பார்வதி வரவேற்றார். மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மாவதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் அருணா ராய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் போராட வேண்டும். சாதி, சமய வேறுபாடுகாளை களைந்து இந்தியாவை வளமிக்க நாடாக உருவாக்க வேண்டும். அத்தகைய இந்தியாவில் பெண் வன்கொடுமை இல்லாத நிலை இருக்கும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திடவும், பாலின சமத்துவத்தை பாதுகாத்திடவும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும், என்றார்.

இந்த கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனி ராஜா கலந்து கொண்டு பேசினார். மாநில செயலாளர் மஞ்சுளா, ஏ.ஐ.டி.யு.சி. தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவிதா நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் திருநங்கை ரேவதியின் வெள்ளை மொழி நாடகம், பறையாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக கோஹினூர் தியேட்டர் ரோடு சந்திப்பு அருகில் இருந்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் தில்லைநகர், தென்னூர் ரோடு வழியாக சென்று புத்தூர் நால் ரோட்டை வந்தடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்