இந்திய வர்த்தக தொழில் குழும ஆலோசனை கூட்டம்

நாகையில் இந்திய வர்த்தக தொழில் குழும ஆலோசனை கூட்டம்

Update: 2023-05-29 18:45 GMT


நாகையில் இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சலிமுதீன் தலைமை தாங்கினார். தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நாகை மாவட்ட மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஒரத்தூருக்கு மாற்றம் செய்யப்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை நிவர்த்தி செய்யும் வகையில், நாகையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஒரு சில அவசர பிரிவுகள் மட்டும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று தொழில் குழுமத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கை குறித்து பேசினார். அப்போது தொழில் குடும்பத்தினர் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்