டிரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் - மத்திய மந்திரி அனுராக் தாகூர்

நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது

Update: 2022-12-06 14:52 GMT

சென்னை,

சென்னை தனியார் கல்லூரியில் டிரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு மற்றும் டிரோன் உற்பத்தி மையத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு ,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை  மந்திரி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தும், டிரோன்களின் நிகழ்வை கண்டுகளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அனுராக் தாகூர் ,

நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது,உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பு இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் டிரோன் எவ்வளவு உதவியாக இருந்தது என நாம் பார்த்தோம் என்றார்.

 கிசான் டிரோன் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டிய மந்திரி , நாட்டில் 740 மாவட்டங்களில் 75 ட்ரோன் வேன்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்லூரியின் முன் முயற்சி பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.

பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து நவீன டிரோன் தொழில்நுட்பச் சூழல், அமிர்த காலத்தில் தன்னிறைவு கொண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

டிரோன் மூலம் அதிவேகமாகக் காய்கறிகள் மற்றும் பழங்களை வெளியே கொண்டு செல்ல கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்றார்.

மேலும், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக அதிகரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டிரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்