"உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழ்கிறது" - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழும் இந்தியாவைக் குறித்து மாணவர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டார்.

Update: 2022-10-09 00:51 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த 567 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, புதிய இந்தியாவை படைக்க இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் வரும் 2 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் கூறினார். உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழும் இந்தியாவைக் குறித்து மாணவர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது உலக நாடுகள் இந்தியாவை வியந்து பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், 2047-ம் ஆண்டில் அனைத்து துறைகளிலும் இந்தியா முழுமை பெற்று உலகை வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்