கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற 'இந்தியா கூட்டணி' எம்.பி.க்கள்
'இந்தியா கூட்டணி' எம்.பி.க்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
சென்னை,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் , நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்படி, தமிழச்சி தங்கபாண்டியன், விஜய் வசந்த், சுதா ஆகியோர், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.